Thursday, August 4, 2011

நான் (Star In Style)

தேன் சுமக்கும் பூக்கள் பல


முகர்ந்து சுவைக்கும் வண்டாய் நான்

கட்டுகடங்க காளை நான்

கன்னியர் பலரின் கனவினில் நான்

உயிரும் பெண்கள், மெய்யும் பெண்கள்

உயிரும் மெய்யும் கலந்தும் பெண்கள்

"ஃ" ஏந்திய ஒருவன் நான்

கன்னித் தமிழும் என்னிடம் நாணும்

விரல்கள் பட்டதும் கவிதை பல பாடும்

எண்ணியதை முடிக்கும் எத்தன் நான்

மனதை மயக்கும் ஜித்தன் நான்

காதலில் என்றும் மன்னன் நான்

தசரதன் அல்ல கண்ணன் நான்

விரல்கள் அனைத்திலும் வித்தைகள் நூறு

உன் மனதில் பவனி வரும் யன் சிந்தனை தேரு

------Stalin Rajakilli

கனவில் தோன்றிய தேவதை

கனவில் தோன்றிய தேவதை அவள்

விண்மீன் கூட்டத்தில் நிலவென அவள்

காலை வந்தது கனவை கலைத்தது

தூக்கத்தில் விழித்தேன் துக்கத்தில் விழுந்தேன்

காலையை வெறுத்தேன் இரவினை அணைத்தேன்

கனவில் வந்தவள் நீ என சொல்ல

இல்லை இல்லை இல்லை என அவள் அதை மறுக்க

வாடிய மனதுக்கு ஆறுதல் சொன்னேன்

இரவினில் வருவாள் சிறை இடு என்று

-------- Stalin Rajakilli