Thursday, August 4, 2011

நான் (Star In Style)

தேன் சுமக்கும் பூக்கள் பல


முகர்ந்து சுவைக்கும் வண்டாய் நான்

கட்டுகடங்க காளை நான்

கன்னியர் பலரின் கனவினில் நான்

உயிரும் பெண்கள், மெய்யும் பெண்கள்

உயிரும் மெய்யும் கலந்தும் பெண்கள்

"ஃ" ஏந்திய ஒருவன் நான்

கன்னித் தமிழும் என்னிடம் நாணும்

விரல்கள் பட்டதும் கவிதை பல பாடும்

எண்ணியதை முடிக்கும் எத்தன் நான்

மனதை மயக்கும் ஜித்தன் நான்

காதலில் என்றும் மன்னன் நான்

தசரதன் அல்ல கண்ணன் நான்

விரல்கள் அனைத்திலும் வித்தைகள் நூறு

உன் மனதில் பவனி வரும் யன் சிந்தனை தேரு

------Stalin Rajakilli

கனவில் தோன்றிய தேவதை

கனவில் தோன்றிய தேவதை அவள்

விண்மீன் கூட்டத்தில் நிலவென அவள்

காலை வந்தது கனவை கலைத்தது

தூக்கத்தில் விழித்தேன் துக்கத்தில் விழுந்தேன்

காலையை வெறுத்தேன் இரவினை அணைத்தேன்

கனவில் வந்தவள் நீ என சொல்ல

இல்லை இல்லை இல்லை என அவள் அதை மறுக்க

வாடிய மனதுக்கு ஆறுதல் சொன்னேன்

இரவினில் வருவாள் சிறை இடு என்று

-------- Stalin Rajakilli

Sunday, May 29, 2011

காதலி

வெட்டினால் வளரும் வேர் போல்
அவள் மறுத்தும் துளிர்கிறது என் காதல்
பஞ்சு மிட்டாய் கேட்கும் குழந்தை போல்
அவளுக்காக அடம் பிடிக்கிறது உள்ளம்
வெள்ளம் என வருவாளோ
எனது உள்ளம் நிறைவாளோ
                                           --------- Stalin rajakilli

Tuesday, March 15, 2011

She is Mine

She didnt like me, Still I like her
She didnt love me, Still I love her
She doesnt want to know me, Still I knew her
Still I am saying "She is mine"
Still I am saying "She is mine"

Saturday, February 26, 2011

அவள் என் அவள் (My baby girl)

வானம் எல்லாம் அவளது முகம்
காற்றில்  ஏறியும் கைக்கு எட்டா தூரம்
கடலில் எல்லாம் அவளின் பிம்பம்
பிடிக்க குதித்தேன் களைந்தாள் ஐயோ என்னில் துன்பம்
பாலும் தேனும் கலந்தவள் அவள்
பருக துடிக்கும் வண்டாய் நான்
மூச்சிலும் பேச்சிலும் அவள் பெயர் தான்
எப்படியும் அவள் பெயரின் வலப்புறம் நான்
பிரெஞ்சும் கிரேக்கமும் தோல்வியில் வாட
தமிழும் திணறும் அவளை பாட
வானின் வில்லும் அவளுக்கென வளையும்
காலையும் மாலையும் அவள் கண் அசைவில் மாறும்
என்னுள் எழும் பருவ மாற்றம் அவள்
பருவ செழிப்பின் இமயமாய் அவள்
-- To be continued bY STALIN



 

Thursday, February 10, 2011

For u to feel

You are not in my sight
You are not in my arms but
I am shattered by your thoughts in every breath i take

You are my dreams when i sleep
You are ny thoughts when i awake

Is this is love ?
Is this is worth to live for?

This flow of thoughts are dancing in my mind...