Monday, August 5, 2013

அண்ணன்


என் அப்பனுக்கு எனக்கும் உள்ள இடைவெளியை நிரப்பியவன் 
தன் தாய் பாலை என்னுடன் பகிர்ந்தவன் 
என் நண்பர்களில் என்றும் முதலமானவன் 
நான் பயின்ற என் முதல் பள்ளி அவன் 
என்  கேள்விக்கெல்லாம் பதிலானவன்
யாதும் கொடுத்தாய்  எனக்காக
எங்கும் எதற்கும் உனக்காக 
என் உயிரும் கொடுப்பேன் அதற்காக !!!!

          --------- ரா . ஸ்டாலின் 

Thursday, August 4, 2011

நான் (Star In Style)

தேன் சுமக்கும் பூக்கள் பல


முகர்ந்து சுவைக்கும் வண்டாய் நான்

கட்டுகடங்க காளை நான்

கன்னியர் பலரின் கனவினில் நான்

உயிரும் பெண்கள், மெய்யும் பெண்கள்

உயிரும் மெய்யும் கலந்தும் பெண்கள்

"ஃ" ஏந்திய ஒருவன் நான்

கன்னித் தமிழும் என்னிடம் நாணும்

விரல்கள் பட்டதும் கவிதை பல பாடும்

எண்ணியதை முடிக்கும் எத்தன் நான்

மனதை மயக்கும் ஜித்தன் நான்

காதலில் என்றும் மன்னன் நான்

தசரதன் அல்ல கண்ணன் நான்

விரல்கள் அனைத்திலும் வித்தைகள் நூறு

உன் மனதில் பவனி வரும் யன் சிந்தனை தேரு

------Stalin Rajakilli

கனவில் தோன்றிய தேவதை

கனவில் தோன்றிய தேவதை அவள்

விண்மீன் கூட்டத்தில் நிலவென அவள்

காலை வந்தது கனவை கலைத்தது

தூக்கத்தில் விழித்தேன் துக்கத்தில் விழுந்தேன்

காலையை வெறுத்தேன் இரவினை அணைத்தேன்

கனவில் வந்தவள் நீ என சொல்ல

இல்லை இல்லை இல்லை என அவள் அதை மறுக்க

வாடிய மனதுக்கு ஆறுதல் சொன்னேன்

இரவினில் வருவாள் சிறை இடு என்று

-------- Stalin Rajakilli

Sunday, May 29, 2011

காதலி

வெட்டினால் வளரும் வேர் போல்
அவள் மறுத்தும் துளிர்கிறது என் காதல்
பஞ்சு மிட்டாய் கேட்கும் குழந்தை போல்
அவளுக்காக அடம் பிடிக்கிறது உள்ளம்
வெள்ளம் என வருவாளோ
எனது உள்ளம் நிறைவாளோ
                                           --------- Stalin rajakilli

Tuesday, March 15, 2011

She is Mine

She didnt like me, Still I like her
She didnt love me, Still I love her
She doesnt want to know me, Still I knew her
Still I am saying "She is mine"
Still I am saying "She is mine"

Saturday, February 26, 2011

அவள் என் அவள் (My baby girl)

வானம் எல்லாம் அவளது முகம்
காற்றில்  ஏறியும் கைக்கு எட்டா தூரம்
கடலில் எல்லாம் அவளின் பிம்பம்
பிடிக்க குதித்தேன் களைந்தாள் ஐயோ என்னில் துன்பம்
பாலும் தேனும் கலந்தவள் அவள்
பருக துடிக்கும் வண்டாய் நான்
மூச்சிலும் பேச்சிலும் அவள் பெயர் தான்
எப்படியும் அவள் பெயரின் வலப்புறம் நான்
பிரெஞ்சும் கிரேக்கமும் தோல்வியில் வாட
தமிழும் திணறும் அவளை பாட
வானின் வில்லும் அவளுக்கென வளையும்
காலையும் மாலையும் அவள் கண் அசைவில் மாறும்
என்னுள் எழும் பருவ மாற்றம் அவள்
பருவ செழிப்பின் இமயமாய் அவள்
-- To be continued bY STALIN



 

Thursday, February 10, 2011

For u to feel

You are not in my sight
You are not in my arms but
I am shattered by your thoughts in every breath i take

You are my dreams when i sleep
You are ny thoughts when i awake

Is this is love ?
Is this is worth to live for?

This flow of thoughts are dancing in my mind...

Tuesday, December 21, 2010

Wihtout You

My time stopped waiting for u;
My days regret for each day without U; 
My months wants to spend all its seasons with U;
My Years are shedding tears as they are feeling lonely with out U, dear

Tuesday, December 14, 2010

ColorFull Life

Its u who made my sky blue
Its u who made my fields green
Its u who made my sun yellow
Its u who made my life colorfull

Saturday, November 13, 2010

தமிழ்

தாயிடம் கற்றது மழலை தமிழ்
தந்தை தந்தது அமுத தமிழ்
அண்ணன் கொடுத்தான் கவிதை தமிழ்
நண்பனுடன் பயின்றது ஆசை தமிழ்
காதலி கொடுப்பது முத்த தமிழ்
...மனைவி தருவது இன்ப தமிழ்
என் மூச்சில் எப்போதும் சுவாச தமிழ்
என நெஞ்சில் நிறைந்த என் உயிர் தமிழ் ------ Stalin

Sunday, October 31, 2010

வாழ்க்கை

வாழ்க்கை ஒரு காட்டாறு அதை
அணை கட்டி எழுதுவோம் வரலாறு

Sunday, October 24, 2010

A Drowsyyyyy Love Letter

Hey my sweet " Smirn Off ",
                     Its been long time we did "White MisChief".I know your "Teachers" mom & "Old Monk" dad has a "Black Label" on my name, I will try to change it to"Red Label" so that  we get a"Green Label"on our Love, If nothing works I will give your dad a "Royal Challenge" that I will become a "Old Smuggler" and kidnap u to "Scotch" Land

                   Yours Most lovable "Royal Stag"
                                      Stalin

Mobile

My mobile always sings for
the one who never rings

Mobile

My mobile always sings for
the one who never rings
                -----Stalin Rajakilli

Thirsty Desert

Hey Cloud ,
I don't need your showers !!
your shadow is enough to
make my desert bloom .............. Stalin Rajakilli

இலக்கு

இருட்டில் இன்புற்று இருந்தேன்
    ஒளியாய் வந்தாய்
ஆச்சரியத்துடன் நெருங்கினேன்
    நெருப்பாய் எரித்தாய்
எரிந்தேன் விட்டில் பூச்சியாய்
     என்னை பொசுக்கிய சந்தோசத்தில் நீ
உன்னை அடைந்த மகிழ்ச்சியில் நான்
                         -------ஸ்டாலின்

பருவ மாற்றம்

நான் நானாக இருந்தேன்
      நீ வரும்வரை
என் அணுக்களில் நீ மின்சாரமாய் தாக்கினாய்
      நான் ஆண் ஆனேன்
என் கனவுகளில் நிரம்பினாய்
      நான் வயதடைந்தேன்
என் இருதய கருவறையில் நுழைந்தாய்
      நான் தாயானேன்
ஏன் வாழ்க்கை துணை ஆனாய்
     நான் நீ ஆனேன் !!!
                      -------------ஸ்டாலின்

அலை

காற்று எனும்
கணவன் அடித்ததால்
கரை எனும்
காதலனை அடையும்
அபலை பெண்ணாய்
அலை -- ஸ்டாலின்